பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ உடமைகளுக்கு பாதுகாப்பளிக்க அரசியல் தலைவர்கள் உறுதி

1_0_777080பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களும், அவற்றைச் சார்ந்த நிறுவனங்களும், நிலங்களும் பாதுகாக்கப்படும் என்று அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.

அண்மையில் லாகூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்ற Sebastian Francis Shaw அவர்களைச் சந்தித்த அரசியல் தலைவர்கள் இந்த உறுதியை அவரிடம் அளித்தனர்.
National Assembly என்ற அரசியல் கட்சியின் தலைவரான Ayaz Sadiq அவர்கள், தான் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர் என்பதையும், கத்தோலிக்கக் கல்வியே தன்னை கட்டுப்பாட்டிலும், ஆளுமையிலும் வளர்த்தது என்பதையும் பேராயரிடம் மகிழ்வுடன் கூறினார்.

பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்புக்குச் சொந்தமான ஓர் இடத்தை 2012ம் ஆண்டு வன்முறை கும்பல் அபகரித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருவாளர் Sadiq அவர்கள், இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தின் மனித உரிமை மற்றும் சிறுபானமைத்துறையின் அமைச்சரான, Khalil Tahir Sindhu என்ற கத்தோலிக்கர், சிறுபான்மை சமுதாயத்தினர், குறிப்பாக கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு, தான் தனிப்பட்ட கவனம் செலுத்துவேன் என்று பேராயர் Shaw அவர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *