இறைவனுக்கு முழுவதும் சொந்தமான மக்களே புனிதர்கள். கேலி செய்யப்படுதல், தவறாகப் புரிந்துகொள்ளப்படல், ஓரங்கட்டப்படல் போன்றவை குறித்து அவர்கள் அஞ்சுவதில்லை என, தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு மொழிகளில் குறுஞ்செய்திகளை பதித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ், நாமும் புனிதர்கள் போன்று பிறரின் கேலிப்பேச்சுக்கள் குறித்து கவலையின்றி முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.