நாம் நற்செய்திக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமெனில் நமக்குத் துணிச்சல் தேவை

24 நாம் நற்செய்திக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமெனில் நமக்குத் துணிச்சல் அவசியம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய் மாலையில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‏@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில், இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ப்ரெஞ்ச், போர்த்துக்கீசியம், ஜெர்மானியம், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் எழுதி வருகிறார்

மேலும், உற்பத்தியை மேம்படுத்துதல், சமூக அமைப்பில் மாற்றம், ஏழைகள்மீது தோழமை ஆகியவை வழியாக உணவுப் பாதுகாப்பை அடைய முடியும் என்று, ஐ.நாவுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள் கூறியிருப்பதை, திருப்பீடச் செயலகம், @terzaloggia என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று பிரசுரித்துள்ளது.

இன்னும், கடந்த வாரத்தில் குவைத்தில் மேற்கொண்ட அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணத்தில் குவைத் அதிகாரிகள் தனக்குக் கொடுத்த இனிய வரவேற்புக்கும், திருப்பீடத் தூதரகம் அந்நாட்டில் திறக்கப்பட்டதற்கும் திருப்பீடச் செயலகத்தின் நேரடிப் பொதுச் செயலர் பேராயர் Giovanni Angelo Becciu அவர்கள் @terzaloggia டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *