இந்தியாவிலே மிக உயரமான இயேசுவின் இறைஇரக்க திருவுருவ

ccஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மிக உயரமான இயேசுவின் இறைஇரக்க(கருணை) திருவுருவம் ஒன்று வருகிற திங்களன்று ஆசீர்வதிக்கப்பட்டு திறக்கப்படவுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் சாகர்(Sagar) நகருக்கு 15 கிலோ மீட்டரிலிருக்கின்ற Khajooria Guru கிராமத்தில் செப்டம்பர் 30ம் தேதியன்று திறக்கப்படவுள்ள இத்திருவுருவம், இந்தியாவிலே மிக உயரமான திருவுருவமாக அமைந்திருக்கும்.

இத்திறப்புவிழா குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய சாகர் ஆயர் அந்தோணி சிரியத்(Anthony Chirayath), மக்கள் இந்த இடத்தை தயாசாகர் அதாவது கருணைக்கடல் என்று அழைக்கின்றனர் எனக் கூறினார்.
வருகிற திங்களன்று திறக்கப்படவுள்ள ஏறக்குறைய 13 மீட்டர் உயரமுள்ள இயேசுவின் இறைஇரக்க திருவுருவம், 30 மீட்டர் கான்கிரீட் அடித்தளத்தின்மீது பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *