இன்றைய மனித குலத்தின் நம்பிக்கைகளை, சந்தேகங்களை மற்றும் ஆவல்களைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே திருஅவையின் சமூகத்தொடர்புப் பணிகளின் நோக்கம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமூகத்தொடர்புக்கான திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்துவை மக்கள் அறிந்துகொள்ள திருஅவையின் சமூகத்தொடர்புத் துறைகள் உதவுகின்றனவா என்பது குறித்து ஆழமாக ஆராயவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நம் இவ்வுலக வாழ்வு மற்றும் பயணத்தில் காணப்படும் வனப்பு, நம் விசுவாசம் மற்றும் இயேசுவுடன் நாம் கொள்ளும் சந்திப்பின்வழி கிட்டும் திருப்தி போன்றவைகளை சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியும், நம் தனிப்பட்ட தொடர்புகள் வழியும், மீண்டும் கண்டுகொள்வதே நமக்கிருக்கும் சவால் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.