‘மீண்டும் போர் என்பது ஒருபோதும் வேண்டாம்! ஒருபோதும் மீண்டும் போர் வேண்டாம்’ என் தன் திங்கள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஆங்கிலம் உட்பட ஒன்பது மொழிகளில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் குறுஞ்செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை, அண்மைக் காலங்களில் எகிப்து மற்றும் சிரியாவில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதே நாளில் பிறிதொரு டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ள திருத்தந்தை, அதில், ‘நமக்கு அமைதியான ஓர் உலகு வேண்டும், நாம் அமைதியின் மனிதர்களாகச் செயல்படவேண்டும்’ எனவும் எழுதியுள்ளார்.