* இறையாட்சி என்பது உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக தூய ஆவி (ஆண்டவர்) அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
* இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோம்.
* தமக்கு அஞ்சி நடப்பவரையும், தமது பேரன்புக்காகக் காத்திருப்பவரையும் இறைவன் கண்ணோக்குகிறார்.
* மன ஒற்றுமை கொண்டிருங்கள், அமைதியுடன் வாழுங்கள், அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
* இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்தால், ஆசிகளெல்லாம் உன் மேல் வந்து உன்னில் நிலைக்கும். நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய், வயல் வெளியிலும் ஆசி பெற்றிடுவாய்.
* உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள். ஆம்! ஆசி கூறுங்கள், சபிக்க வேண்டாம்.
* இறைவன் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.
* இறைவனுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.