புதுவை நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழா செவ்வாய்க்கிழமையன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புதுவை நெல்லித்தோப்பில் அமைந்துள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா செவ்வாய்க்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி காலை 6 மணி திருப்பலிக்கு பின்னர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம், ஆலய முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றி வைத்தார். இதில் புதுவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நவநாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, சிறிய தேர்ப்பவனி அதனை தொடர்ந்து நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறுகிறது. வருகிற 15ம் தேதி ஆண்டு பெருவிழாவினையொட்டி புதுவை பேராயர் அந்தோணி அனந்தராயர் தலைமையில் நடைபெறும் கூட்டு திருப்பலிக்கு பின்னர், மாலையில் ஆடம்பர தேர்ப்பவனி நடைபெறவிருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை குழந்தைசாமி தலைமையில் பங்கு பேரவையினர் மற்றும் இளைஞர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.