CRI என்ற இந்திய இருபால் துறவு சபையினரின் தேசிய அமைப்பின் பொன்விழாவும், அதன் தேசிய மாநாடும் வருகிற நவம்பர் 7 முதல் 9 வரை Guwahati, புனித தொன்போஸ்கோ நிறுவனத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேசிய மாநாட்டின் நிகழ்ச்சிகள் குறித்துப் பேசிய CRIன் தலைவர் சலேசிய சபை அருள்பணி வி.எம்.தாமஸ், Guwahati பேராயர் John Moolachira திருப்பலி நிகழ்த்தி இப்பொன்விழாவைத் தொடங்கி வைப்பார் என்று கூறினார்.
இந்த மூன்று நாள் மாநாட்டில், “துறவிகள் : தியானயோகிகளும் இறைவாக்கினரும்” என்ற தலைப்பில் Guwahati முன்னாள் பேராயர் Thomas Menamparampil அவர்களும், “21ம் நூற்றாண்டில் துறவற தலைமைத்துவம்” என்ற தலைப்பில் அருள்பணி தாமசும் உரை நிகழ்த்துவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இம்மாநாட்டில் ஏறக்குறைய 450 துறவு சபைகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : UCAN