ஆண்டவரிடம் தினமும் உருக்கமான ஜெபம் செய்யுங்கள். இதோ! அந்த பிரார்த்தனை.
* ஆண்டவரே! என் ஜீவனை உமக்கே அர்ப்பணிக்கிறேன்.
* என் நேரங்களை, என் நாட்களை உமக்கே ஒப்புவிக்கிறேன். அவைகள் ஓய்வின்றி உம்மையே புகழ்ந்து கொண்டிருக்கட்டும்.
* என் கரங்களை உமக்கே ஒப்புவிக்கிறேன். என் கரங்களின் கிரியைகள் உமது அன்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கட்டும்.
* என் கால்களை உமக்கே ஒப்புவிக்கிறேன். அவைகள் உமது பார்வையில் அழகாக இருக்கட்டும்.
* என் குரலை உமக்கே ஒப்புவிக்கிறேன். அவைகள் என் ராஜாவை (ஆண்டவரை) புகழ்ந்து பாடிக்கொண்டேயிருக்கட்டும்.
* என் உதடுகளை உமக்கே ஒப்புவிக்கிறேன். அவைகளால் உம்முடைய செய்திகளால் நிறைந்திருக்கட்டும்.
* இரக்கமுள்ள ஆண்டவரே! என்னிடமிருக்கும் பொன்னும் வெள்ளியும் உம்முடையதே. அவற்றை உமக்கே ஒப்புவிக்கிறேன். நீர் விரும்புகிறபடியே அவைகள் செலவழிக்கப்படட்டும்.
* என் புத்திக்கூர்மையை உமக்கே ஒப்புவிக்கிறேன். நீர் தெரிந்தெடுக்கிற வண்ணமாக அதைப் பயன்படுத்தும்.
* என் சித்தத்தை உமக்கே ஒப்புவிக்கிறேன். அதை உம்முடைய சித்தத்தின்படியே உருவாக்கும்.
* என் இருதயத்தை உமக்கே ஒப்புவிக்கிறேன். அது இனி உம்முடையது.
* ஆண்டவரே! என் அன்பை உமது பாதத்தில் ஊற்றி விடுகின்றேன். அதை நீர் ஏற்றுக்கொள்ளும்.
* என்னையே உம்மிடம் ஒப்புவிக்கிறேன். என்னை என்றும் உம்முடையவன் ஆக்கிக்கொள்ளும்.