28.7.13 ஞாயிறு அன்று – புதுவை-கடலூர் உயர்மறை மாவட்டத்தின் 103 பங்கை சார்ந்த இளையோர் பங்குபெற்ற உலக இளையோர் தின கொண்டாட்டங்கள் காலை 8:30 மணிமுதல் மாலை 4:30 மணிவரை புதுவை பெத்திசெமினார் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. நண்பகல் 12 மணி அளவில் புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பேராயர் மேதகு.டாக்டர்.அந்தோனி ஆனந்தராயர் தலைமையில் நடைபெற்ற ஆடம்பர சிறப்பு கூட்டுத் திருப்பலியில் அனைத்து பங்கை சார்ந்த இளையோறும் , திரளான குருக்களும் -அருட்கன்னியர்களும் , பொதுமக்களும் கலந்து கொண்டனர்