இமயமாகும் இளமை – நம்பிக்கையை விதைத்த தமிழக இளையோர்

2017ம் ஆண்டு, சனவரி 14, பொங்கல் திருநாளன்று, உலகில், பெரும்பாலானோரின் பார்வை, மெரினா கடற்கரையை நோக்கித் திரும்பியிருந்தது. 2017ம் ஆண்டு, சனவரி மாதம், இலட்சக்கணக்கான இளையோர், மெரினா கடற்கரையில் மேற்கொண்ட போராட்டம், நம் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளது. மெரினா கடற்கரையில் துவங்கி, தமிழகமெங்கும், கண்ணியமான முறையில், நடைபெற்ற அந்தப் போராட்டத்தின் விளைவாக, தடைசெய்யப்பட்டிருந்த ‘ஜல்லிக்கட்டு’ விளையாட்டு, மீண்டும், தமிழ்நாட்டில் துவக்கப்பட்டது.

சுயவிளம்பரம் தேடும் நடிகர்களையும், தலைவர்களையும் சார்ந்திராமல், அரசியல் நாற்றம் அறவே இல்லாமல் நடத்தப்பட்ட அந்த அறப்போராட்டம், நம்மை வியக்கவைத்தது; இளையோர் மீது நம்பிக்கையை விதைத்தது. கொள்கைகளை மையப்படுத்தி, திரண்டுவந்த இளையோர், இன்னும் பல சமுதாய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, திரண்டு வரவேண்டும் என்ற வேண்டுதலை, இறைவனின் சந்நிதியில், பொங்கல் திருநாளன்று சமர்ப்பிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *