புனித வெள்ளியன்று ஈராக் நாட்டின் Iskanderiyeh விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் செபத்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பாக்தாத் திருப்பீடத் தூதர் பேராயர் ஆல்பெர்த்தோ ஒர்த்தேகா மார்ட்டின் அவர்களுக்கு அனுப்பியுள்ள அனுதாபத் தந்திச் செய்தியில், இத்தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்குத் திருத்தந்தையின் செபமும், ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஈராக்கிலும், சிரியாவிலும் இயங்கும் ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் இப்பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.