இந்தியாவின் Bagdogra மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி Vincent Aind அவர்களை இச்செவ்வாயன்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கலகத்தாவின் Morning Star குருத்துவக் கல்லூரியின் தத்துவ இயல் துறைத் தலைவராக பணியாற்றிவந்த அருள்பணி Vincent Aind அவர்கள், உரோம் நகர் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
மேற்குவங்கத்தின் Kalchini என்னுமிடத்தில் 1955ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் Vincent Aind அவர்கள், 1984ம் ஆண்டு Jalpaiguri மறைமாவட்டத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
Bagdogra மறைமாவட்ட ஆயர் Thomas D’Souza அவர்கள், கல்கத்தா பேராயராக 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி மாற்றப்பட்டதிலிருந்து, ஆயரின்றி இருந்த இம்மறைமாவட்டத்திற்கு தற்போது அருள்பணி Vincent Aind அவர்களை புதிய ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.