2013ம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 241 நிகழ்வுகள், ஐரோப்பாவில் இடம்பெற்றதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான சகிப்பற்றத் தன்மைகள் மற்றும் பாகுபாட்டு நிலைகளை ஆய்வு செய்யும் கண்காணிப்பகம், 2013ம் ஆண்டில் ஐரோப்பாவின் நிலைகள் குறித்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாழ்ந்துவரும் ஐரோப்பாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான சகிப்பற்றத் தன்மைகள் அதிகரித்துவருவதாகக் கூறும் இக் கண்காணிப்பகம், கடந்த ஆண்டு, 11 ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற 133 தாக்குதல்களை, தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டில், 14 ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவர்கள் தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்தத் தடை இருந்ததாகவும் எடுத்துரைக்கிறது இந்தக் கண்காணிப்பகம்.