மனித குலத்தின் வருங்காலம் குடும்பமே

1_0_800144இறைவனின் உயர் மதிப்பைப் பெற்றுள்ளது குடும்பம், எனவே, அது அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட வேண்டும் என்று, குடும்பத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆசிய கத்தோலிக்கக் கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது.

பிலிப்பின்ஸ் நாட்டுத் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற குடும்பம் குறித்த முதல் ஆசியக் கருத்தரங்கில் பங்கேற்ற 551 உறுப்பினர்களும் இக்கருத்தை முழுமையாக ஆமோதித்தனர்.
மனித குலத்தின் வருங்காலம் குடும்பம் வழியாகத் தொடர்வதையே இறைவன் விரும்புகிறார் என்பதால், குடும்பங்களைப் பாதுகாப்பதும், வளமாக்குவதும், முன்னேற்றுவதும் நம் கடமை என்று இக்கருத்தரங்கின் இறுதி அறிக்கையில் கூறியுள்ளார், பிலிப்பின்ஸ் ஒய்வு பெற்ற ஆயர் Teodoro Bacani அவர்கள்.

ஒரே பாலினத் திருமணம், கருத்தடைக் கருவிகள் இலவசமாக வழங்கப்படுதல், கருகலைப்பைச் சட்டமாக்குதல் போன்றவை, பாரம்பரியக் குடும்பங்களில் உருவாக்கும் பாதிப்புக்கள் குறித்து, இந்த ஆசியக் கருத்தரங்கில் கலந்துகொண்டோர் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *