இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட Gangte பழங்குடி இன மக்கள் ஒன்று சேர்ந்து விவிலியம் வாசித்து சாதனை படைத்துள்ளனர்.
Gangte கிறிஸ்தவ நற்செய்தி நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 7,047 பேர் விவிலிய வாசிப்பில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புதிய ஏற்பாட்டில் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் முதல் 16 அதிகாரங்களையும் பகல் 1.27 மணிக்குத் தொடங்கி 2.53 மணிக்கு வாசித்து முடித்துள்ளனர்.
லிம்கா சாதனைப் புத்தகம், ஆசியச் சாதனைப் புத்தகம், இந்தியச் சாதனைப் புத்தகம் ஆகியவற்றில் இவர்களின் இச்சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.