போலந்து நாட்டின் Krakowவில் 2016ம் ஆண்டில் இடம்பெறவிருக்கும் அடுத்த உலக கத்தோலிக்க இளையோர் தினத்திற்கென அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்றைத் திறந்துள்ளது தலத்திருஅவை.
அடுத்த உலக இளையோர் தினம், போலந்து நாட்டின் Krakowவில் 2016ம் ஆண்டில் இடம்பெறும் என்று பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த சிலமணி நேரங்களில் அத்தினத்திற்கென இணையதளம் ஒன்றைத் திறந்துள்ளது போலந்து திருஅவை.
Krakow பேராயர் கர்தினால் Stainslao Dziwisz திறந்துவைத்துள்ள இவ்விணையதளம், ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மானியம், இத்தாலியம், இஸ்பானியம், போலந்து ஆகிய மொழிகளில் தகவல்களை வெளியிட்டு வருகிறது.
Krakow நகரம் பற்றியும், 2016ம் ஆண்டின் உலக இளையோர் தினம் பற்றியும் செய்திகள் இதில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த இணையதள முகவரி www. Krakow 2016.com