‘இயேசுவின் சிலுவையில் நம் நம்பிக்கை மீண்டும் மீண்டும் பிறக்கிறது’ என்ற மையக்கருத்துடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘இயேசு நம் பாவங்களை மன்னிப்பாகவும், அச்சங்களை நம்பிக்கையாகவும் மாற்றுகிறார். அவரின் சிலுவையில் நம் நம்பிக்கை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது’ என உரைக்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.
ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
மார்ச் 27, இச்செவ்வாய் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1504 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 73 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.