வன்முறைகளைச் சந்தித்த கந்தமால் பகுதியில் அருள் சகோதரிகள் ஒரு குழுமத்தைத் துவங்கவேண்டும் என்ற நெடுங்கால ஆவல் நிறைவேறவுள்ளது என்று, கட்டக் புவனேஸ்வர் பேராயர், ஜான் பார்வா அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், 2008ம் ஆண்டு, இந்து அடிப்படைவாத குழுவால் கொடிய வன்முறைகளைச் சந்தித்த கந்தமால் பகுதியில், சலிமக்குச்சா (Salimaguchha) என்ற ஊரில், புனித அன்னை தெரேசாவால் உருவாக்கப்பட்ட பிறரன்பு மறைப்பணியாளர் சகோதரிகள் சபையினர் ஓர் இல்லத்தைத் துவக்கவுள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறியுள்ளது.
வறியோருக்கு உதவிகள் வழங்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ள இந்த இல்லம், மே மாதம் 13, பாத்திமா அன்னையின் திருவிழாவன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.