ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிப்போம்

33பிலிப்பீன்சில் ஹையான் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தன்னோடு சேர்ந்து அனைவரும் செபிக்குமாறு, குறிப்பாக, Yolanda தீவில் இப்புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், நமது வாழ்வுக்கு முக்கியமான இயேசு கிறிஸ்துவை மையம் கொண்டதாக அவ்வாழ்வு இருக்க வேண்டும். மற்ற அனைத்தும் இரண்டாம்பட்சமே என்ற மற்றொரு செய்தியையும் @pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கை ஆண்டு நிறைவடையவிருக்கிறது. இந்த அருள்நிறைந்த தருணத்தில், ஆண்டவரே, நற்செய்தியை நாங்கள் கவனமாய் உள்வாங்குவதற்கு எமக்கு உதவி செய்யும் என, தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளி மாலையில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு நாளும் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு மொழிகளில் குறுஞ்செய்திகளை பதித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தியை நாம் வாழ்வாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தென் அமெரிக்க நாடான பரகுவாயில் இம்மாதம் 15ம் தேதி இடம்பெறவிருக்கும் தேசிய திருப்பயண நிறைவுக் கொண்டாட்டத்துக்கு, தனது பிரதிநிதியாக, திருப்பீட குருக்கள் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் Cláudio Hummes அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைசாட்சிகள் புனித Roque González de Santa Cruz மற்றும் அவரின் உடன் பணியாளர்கள் புனிதர்களாக உயர்த்தப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவையொட்டி அவர்களின் புனிதப்பொருள்கள் பரகுவாய் நாட்டில் தேசிய அளவில் எடுத்துச் செல்லப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *