மனிதக் கணக்கீடு, பயம் ஆகியவை இன்றி புரிந்துணர்வு மற்றும் அன்புடன் ஏழைகளை நோக்கும் கருணைப் பண்பை ஆண்டவரிடம் கேட்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Pope Francis @Pontifex_en என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், ஏழைகள்மீது நாம் கனிவுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
மேலும், திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றும் தலைவர்கள் சிலரின் பதவிகளை இச்செவ்வாயன்று மீண்டும் உறுதிசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanisław Ryłko, அவ்வவையின் செயலர் ஆயர் Josef Clemens, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் Peter Kodwo Appiah Turkson, அதன் செயலர் ஆயர் Mario Toso, இன்னும், அதன் தற்போதைய உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களின் பதவிகளை மீண்டும் உறுதிசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.