எகிப்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட அரசுத்தலைவர் மோர்சியின்(Morsi) ஆதரவாளர்கள் நடத்திவரும் வன்முறைப் போராட்டங்களில் கெய்ரோவிலும் பிற இடங்களிலும் 23 கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இவ்வன்முறை குறித்துப் பேசிய எகிப்தின் கத்தோலிக்கத் திருஅவைப் பேச்சாளர் அருள்பணி Rafic Greiche, இவ்வன்முறைகளில் 7 கத்தோலிக்க ஆலயங்களும், 15 காப்டிக் ஆர்த்தடாக்ஸ் ஆலயங்களும், ஒரு பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயமும் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மோர்சி அரசை கவிழ்ப்பதற்கு எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் தூண்டுதலாக இருந்தனர் என்று நம்பி, மோர்சியின் ஆதரவாளர்களாகிய இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கி வருகின்றது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இவ்வன்முறைகளில் அண்மை நாள்களில் குறைந்தது 638 பேர் இறந்துள்ளனர் மற்றும் நான்காயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆதாரம் : CWN