28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டோர் குறித்த புள்ளிவிவரங்களை அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இப்புள்ளி விவரங்களின்படி, ஜூலை 23ம் தேதி 6 இலட்சம் இளையோர் கலந்துகொண்ட முதல் நிகழ்வுகளிலிருந்து, ஒவ்வொரு நாளும் இளையோரின் எண்ணிக்கை கூடி, ஜூலை 28, ஞாயிறன்று 37 இலட்சம் இளையோர் பங்கேற்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
175 அயல் நாடுகளிலிருந்து பதிவு செய்திருந்த இளையோரின் எண்ணிக்கை 4,27,000 என்றும், இவர்களில் பெரும்பாலானோர் ஆர்ஜென்டீனா, அமெரிக்க ஐக்கிய நாடு, சிலே, இத்தாலி, வெனிசுவேலா, பிரான்ஸ், பாராகுவே, பெரு, மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
57 நாடுகளிலிருந்து வந்திருந்த 6,500க்கும் அதிகமான செய்தியாளர்கள் இந்நிகழ்வுகளைப் பதிவு செய்து வந்தனர்.
28 கர்தினால்கள் உட்பட, 644 ஆயர்கள், 7814 அருள் பணியாளர்கள், மற்றும் 632 தியாக்கொன்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளால் பிரேசில் நாட்டிற்கு 180 கோடி Reais, அதாவது, 79 கோடியே 20 இலட்சம் டாலர்கள் அளவுக்கு பொருளாதாரம் புழக்கத்தில் இருந்தது என்று பிரேசில் நாட்டு சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி